கூத்தாநல்லூர் அதை சுற்றியுள்ள மக்களுக்கு ஒரு மனிதநேய
சேவையை நம்மால் செய்யமுடியுமா? என்று எண்ணிய வேளையில், ஆம்! நம்மால் நண்மைகளைச் செய்ய முடியும் என்று கூத்தாநல்லூர் எமிரேட்ஸ்
ஆர்கனைசேஷன் (KEO) இன்று அதை நிரூபித்தும் காண்பித்துக்
கொண்டிருக்கிறார்கள். ஆம்! மக்களுக்காக இன்று அவர்கள் சத்தமே இல்லாமல் தொடங்கி இருக்கும் ஒரு
செயல்தான் இந்த ‘ஜெனரிக்’ மருந்தகம்.
மக்களின் அத்தியாவாசிய
பொருட்களில் மருந்தும் ஒன்றாகிவிடும் சூழ்நிலைதான் தற்போது உள்ளது. அதிலும், நீரழிவு நோய், இருதய நோய் உள்ளிட்ட
பாதிப்புள்ளவர்கள், மருந்து
செலவுக்காகவே மாதம் மாதம், சில
ஆயிரங்களை ஒதுக்குகிறார்கள். இதற்கு காரணம், மருத்துவர்கள் விலை உயர்ந்த
மருந்துகளை நோயாளிகளுக்கு பரிந்துரை செய்வதினால்.
இன்று
உலகில் இருக்கக்கூடிய பலத்தரப்பட்ட மக்கள் நோய்வாய்ப்பட்டு அதிகமாக
இறப்பதற்குக்காரணம் மருத்துவக்குறைபாடு அல்ல மாறாக மருத்துவத்திற்கான மருந்துவாங்க
போதிய பொருளாதார வசதி அவர்களிடம் இல்லாததே..! இதற்கு
ஏதாவது மாற்றுவழி இருக்காதா என எண்ணிய KEO ஒரு அற்புதத் திட்டத்தை தொடங்கி
இருக்கிறார்கள் அதுதான் இந்தியாவிலேயே குறைவான விலையில் இல்லை இல்லை இந்தியாவிலேயே
மிக மிகக் குறைவான விலையில் மருந்துகள் விற்கக்கூடிய ஜெனரிக் மருந்துக்கடை.
புரியும்படிக்கூற
வேண்டுமென்றால் சாதாரண ‘மெடிக்கல்’ எனக்கூறப்படும்
கடையில் வாங்கும் மருந்து ஆயிரம் ரூபாய் எனில் அதே மருந்தை இந்த ஜெனரிக்
மருந்தகத்தில் வாங்கும்பொழுது அதன் விலை நூறு ரூபாய் மட்டுமே அதாவது சாதாரண விலையை
விட 90 சதவிகிதம் குறைவாக...!
திருவாரூர்
மாவட்டத்தில் முதன்முதலாக கூத்தாநல்லூர் எமிரேட்ஸ் ஆர்கனைசேஷன் (KEO)
அமைப்பின் மூலம் தொடங்கப்பட்டுள்ள “பிரதம மந்திரி பாரத மக்கள் மருந்தகம்” மத்திய அரசின்
இந்த ஜெனரிக் மருந்தகம் இன்னும் இது தமிழகம் முழுவதும் திறக்கப்படுமானால் தினமும்
நோயினால் அவதிப்படும் ஏழைகளின் கஷ்டம் குறையும் என்பதில் சந்தேகமில்லை.
கூத்தாநல்லூர் மருந்தக முகவரி:
பிரதம மந்திரி பாரத மக்கள் மருந்தகம்
83, பெரியகடை தெரு, கூத்தாநல்லூர் – 614 101.
83, பெரியகடை தெரு, கூத்தாநல்லூர் – 614 101.
திருவாரூர் மாவட்டம் -
WhatsApp
+91 83004 66980.
0 comments:
Post a Comment