Welcome to Pradhan Mantri Bhartiya Janaushadhi Pariyojana Kendra (PMBJPK)- Koothanallur

Tuesday, October 9, 2018

ஒரே மருந்து ஏன் இரு விலைகளில் விற்கப்படுகின்றன?


ஒரே மருந்து ஏன் இரு விலைகளில் விற்கப்படுகின்றன?


மருத்துவர் அறிவுரை இல்லமால் பல மருந்துகளை பொதுமக்கள் சாப்பிடுகின்றார்கள். குறிப்பாக complimentary medicine என்று கூறலாம். அப்படி கூறப்படும் Complementary Medicines என்றால் என்ன?
Complementary Medicine-ல் ஆயுர்வேத மருந்துகள், மரபுவழி வந்த சீன மருந்துகள், ஹோமியோபதி, வைடமின் மருந்துகள் போன்றவை Complementary Medicine என்று வகையில் அடங்கும். இவற்றில் பெரும்பாலானவை பொது விற்பனைக்கு உரிய மருந்துகள். இவை Listing முறைப்படி பதிவு செய்யப்படுவதால்,  பதிவு எண் பெற்றவையாக இருக்கும்.
ஒரே மருந்திற்கு இரண்டு பெயர்கள் உள்ளனவே. Generic name & Brand name என்று கூறுகின்றார்கள். இந்த இரு பெயர்கள் ஏன்? இந்த இரு பேர்களில் என்ன வேறுபாடுகள் உள்ளன?  

Brand name  என்பது ஒரு மருந்தைத் தயார் செய்து விற்பனை செய்யும் நிறுவனம் தங்கள் மருந்திற்கு வைத்திருக்கும் வாணிகப் பெயர்.

Generic name என்பது அந்த மருந்தின் Chemical name என்னும் ரசாயனப் பெயர் அல்லது வேதியப் பெயராகும். உதாரணமாக, Advil, Nurofen என்பவை வாணிகப் பெயர்கள், Ibuprofen என்பது அந்த மருந்தின் ரசாயனப் பெயர். அதே போல, Panadol என்பது வாணிகப் பெயர், Paracetamol, Acetaminophen என்பவை ரசாயனப் பெயர்கள்.
ஒரே ரசாயனப் பொருள் உள்ள மருந்தை பல நிறுவனங்கள் பல வியாபாரப் பெயர்களில் விற்றாலும், அந்த மருந்துகளின் Label-களில் ரசாயனப் பெயரைக் குறிப்பிட வேண்டுமென்பது சட்டமாக உள்ளது. அதிலும், எல்லா Label-களிலும் முன் பகுதியில் அதன் ரசாயனப் பெயர் இருக்க வேண்டும் என்பது Label-களுக்கான பல விதிகளில் ஒன்று. ஒரு மருந்தின் ரசாயனப் பெயர் தெரிந்திருந்தால் அந்த மருந்தை நாம் பயணம் செய்யும்போது தேவைப்பட்டால் மற்ற நாடுகளிலும் எளிதாக அடையாளம் கண்டு வாங்கிப் பயன்படுத்த முடியும்.

மருத்துவர் சீட்டுக்கு மருந்து வாங்கும் போது மருந்துக் கடைகளில் குறைந்த விலையில் உள்ள Generic Product -வேண்டுமா என்று கேட்கிறார்கள்.   Generic Product – என்றால் என்ன?

Prescription மருந்துகளில் உள்ள முக்கியமான செயல்படுகின்ற பொருள் அல்லது மூலமருந்து (Active Ingredient) ஒவ்வொன்றையும் ஏதாவது ஒரு வியாபார நிறுவனம் பல மில்லியன் டாலர்களைச் செலவழித்து, பல வருட ஆராய்ச்சிக்குப் பிறகு கண்டுபிடித்து முதன் முதலாக உலக அளவில் வியாபாரம் செய்ய அனுமதி பெற்றிருக்கும். அந்த மூலமருந்துக்கான தனி உரிமையையும் (Patent) சுமார் 20 ஆண்டுகளுக்குப் பெற்றிருக்கும். அதை Leader Product  என்று அழைப்பார்கள். அந்தத் தனி உரிமை (Patent) முடியும் காலம் வரை மற்ற நிறுவனங்கள் அந்த மூலமருந்தை வியாபாரத்திற்கு உபயோகிக்க முடியாது. ஆராய்ச்சிக்காக அந்த நிறுவனம் முதலீடு செய்த பணத்தை திரும்பப் பெறுவதற்காக உலகளாவிய அளவில் இந்த வசதி செய்யப்பட்டுள்ளது. முதலீடு செய்த தொகையைத் திரும்பப் பெற வழி இல்லையென்றால் புதிய மருந்துகள் கண்டுபிடிப்பதற்கு எந்த நிறுவனமும் முயற்சியில் இறங்காது. இதனால் பல நோய்களுக்கு புதிய மருந்துகள் கண்டுபிடிக்கப்படாமல் மனித சமூகத்திற்கு பெரிய நஷ்டம் ஏற்படும்.
மூலமருந்துக்கான தனி உரிமை முடிந்தபின், மற்ற தயாரிப்பாளர்கள் அந்த மருந்தைத் தயாரித்து விற்க முடியும். அப்படி விற்கப்படும் மருந்துப் பொருட்களை Generic productஎன்று அழைப்பார்கள். Generic product- வியாபாரம் செய்யும் நிறுவனங்களுக்கு மூலமருந்தைக் கண்டுபிடிப்பதற்கு முதலீடு செய்யவேண்டிய அவசியமில்லை. முதலீட்டைத் திரும்பப் பெறவேண்டிய கட்டாயமும் அவர்களுக்கு இல்லை. அதனால் அவர்களால் தங்கள் மருந்தை குறைந்த விலைக்கு விற்க முடிகிறது.

Generic products – தரமானவையாக இருக்குமா?  Leader Productபோல வேலை செய்யுமா?

Generic products –ம் Leader Product போல வேலை செய்யும். Generic product-ஐப் பதிவு செய்து வினியோகிக்க சில விதிமுறைகளை வகுத்துள்ளது. அதன்படி, Generic productஒரு குறிப்பிட்ட தரத்தில் Leader Product- ஒத்து இருக்கவேண்டும். முக்கியமாக மனித உடலில் அவை ஒரே முறையில் செயல்படவேண்டும். இதற்கான பரிசோதனையை ஆங்கிலத்தில் Bioequivalence Studyஎன்று கூறுவார்கள். அந்தப் பரிசோதனையில் நிரூபணம் ஆகி இருந்தால்தான் Generic product- விற்பனை செய்ய NABL அனுமதிப்பார்கள். எனவே Generic product-ம் Leader Product-ஐப் போலவே பலன் தரும்.

Share:

0 comments:

Post a Comment